நிட்டம்புவை - பஸ்யாலை பிரதேசத்தில் இன்று வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான பஜிரோ வண்டியை திருடிச் சென்றுள்ளதாக நிட்டம்புவை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிட்டம்புவை நகரில் வாகன விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரின் வாகனமே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ள திருடன், சாவிகள் மாட்டி வைக்கும் இடத்தில் இருந்து வண்டி சாவியை எடுத்து, பஜிரோவை கொள்ளையிட்டு சென்றுள்ளமை காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் போது தெரியவந்துள்ளது.
கொள்ளை நடந்த நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள் உறங்கியுள்ளனர். பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சியின்படி சந்தேக நபர் கொழும்பு - கண்டி பிரதான வீதி ஊடாக கொழும்பு திசை நோக்கி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
மகிந்த ராஜபக்ச தனது 2 பதவிக்காலம் முடிவடைந்ததும் ஓய்வ
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய ம
நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊர
“உங்களை சுட வந்ததாக தெரிவித்து பயங்கரவாத தடைச்சட்டத
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
இலங்கை சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த பெப்ரவர
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர்
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளு
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட
இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி ஆயுதப் படைகளி
கெப் வண்டியின் பின் பகுதியில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தி
உயர்ந்த கட்டிடங்களுக்கு மாறாக ரம்மியமான ச
நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை அ
புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பா