பிரபல ஜோதிடர் ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுடன் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகேவிடம் நேற்று அறிவித்துள்ளனர்.
47 பவுன் தங்கம் மற்றும் 140 லட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்துடன் தனது மனைவி பிள்ளைகள் இருவருடன் தப்பி சென்றுள்ளதாக முல்லைரியா பிரதேசத்தை சேர்ந்த பிரபல சோதிடர் முல்லேரியா பொலிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டிற்கமைய, இரண்டரை வயது மற்றும் ஒன்றரை வயது குழந்தைகளை அவரது மனைவி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு பொருட்களை கொள்ளையடித்த மனைவி வெளிநாடு செல்ல முயற்சித்து வருவதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது. இதனால் அவரது வெளிநாட்டு பயணங்களை தடை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சட்டப்பூர்வமான மனைவிக்கு, குழந்தைகளையும் சொத்துக்களையும் எடுத்துச் செல்ல உரிமை உண்டு எனவும், அதன் விளைவாக அவர் வெளிநாடு செல்வதைத் தடை செய்ய சட்டப்பூர்வ ஆதாரம் இல்லை எனவும், கூறிய நீதவான் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இனிப்பு வகைகளின் விலையை 10
சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிர
தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல எண்ணிக்கையிலான ப
தமிழ்த்தேசம் இழந்துபோன ஜனநாயகத்தையும், இறந்துபோன சம உ
நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதி
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படு
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசால
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள
சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர
செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும்
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட
காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் த
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இருந்தே தேர்த ல்
அரசாங்கம் தனது தவறுகளை ஏற்றுக்கொண்;டு, நாடு எதிர்நோக்