நேற்று இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மிக விரைவில் வெளியிட எதிர்ப்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன குறிப்பிட்டார்.
அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொவிட் தொற்றுநோய் காரணமாக பல சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் வழமை போன்று நடத்தப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கொவிட் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக , 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை சுமார் 5 மாத கால தாமதத்தின் பின்னர் இன்று நடைபெற்றது.
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 255,062 சிங்கள மொழி மூல பரீட்சார்த்திகளும் 85,446 தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
மேலும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை 2,943 பரீட்சை மத்திய நிலையங்களிலும், 108 விசேட மத்திய நிலையங்களிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி உணவகம் ஒன்றில் உணவு பொதியில் மின் கடத்திக்
இலங்கையில் சத்திரசிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்பட
தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போரா
நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியில
லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில்
குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக யுனிசெஃப் முன்னர
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்
காலியில் உள்ள பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்ற
கொரோனா தொற்றினால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செ
நாட்டுக்களை மக்களை வெளியில் வருவதை தவிர்க்குமாறு இரா
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம்
மருத்துவ விடுப்பு எடுக்காமல் உத்தியோகபூர்வ நடவடிக்க
வொஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் உலக வங்கிய
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க