நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுமாறு மீண்டும் மீண்டும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தேவையற்ற மின்விளக்குகள் மாத்திரமன்றி அத்தியாவசிய மின்விளக்குகளின் பாவனையையும் மட்டுப்படுத்துமாறு மின்சார சபையின் புதிய பதில் பொது முகாமையாளர் கலாநிதி ரொஹந்த அபேசேகர, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனது கடமையை ஆரம்பிக்கும் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. முடியாத நேரங்களை தவிர்த்து அனைத்து நேரங்களிலும் மின்சாரத்தை வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்காக மக்களின் ஆதரவும் எங்களுக்கு அவசியமாக உள்ளது. மக்கள் தேவையற்ற மின்சார பயன்பாட்டினை நிறுத்தி உதவ வேண்டும்.
அவசியமான மின்விளக்குகளின் பயன்பாடுகளையும் மட்டுப்படுத்திக் கொண்டு சிக்கனமாக செயற்படுமாறு நான் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டுக்
அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொண
கொரோனா தொற்றை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முக்க
நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலைய
காவற்துறையினரால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெற
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல
கோட்டாபயவின் பொறிக்குள் விழுந்து விடவேண்டாம் என்றும
யுத்தத்தில் கணவனை யாழ்.நாவலர் வீதியில் பெண் தலமைத்துவ
QR ஒதுக்கீட்டை கடைப்பிடிக்காத லங்கா IOCஇற்கு சொந்தமான 26 எ
இனப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் த