More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • “நீங்கள் கஞ்சாவை ஊட்டப் பார்க்கின்றீர்கள்" டயானவை கலாய்த்த பிக்குமார்..
“நீங்கள் கஞ்சாவை ஊட்டப் பார்க்கின்றீர்கள்
Jan 30
“நீங்கள் கஞ்சாவை ஊட்டப் பார்க்கின்றீர்கள்" டயானவை கலாய்த்த பிக்குமார்..

நாராஹென்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் 83ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அந்த விகாரையில் புண்ணிய தானம் நடைபெற்றது.



இதன்போது அரச தலைவர்  கோட்டாபய ராஜபக்சவும் கலந்துகொண்ட இந்த புண்ணிய தானத்தில் தானம் பரிமாறும் போது நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவும் (Diana Gamage) கலந்து கொண்டுள்ளார்.



தானத்தில் கலந்துக்கொண்ட பிக்குமாருக்கு வெள்ளரிக்காய் சலட்டை பரிமாறிய டயனா கமகே, “நான் சூடாக பேசினாலும் குளிரூட்டும் உணவை பரிமாறுவேன்” எனக் கூறியுள்ளார்.



அப்போது பிக்கு ஒருவர் “நீங்கள் கஞ்சாவை ஊட்டப் பார்க்கின்றீர்கள்” எனக் கூறியுள்ளார். இதன் பின்னர் வெள்ளரிக்காய் சலடை பெற்றுக்கொண்ட அனைத்து பிக்குமாறும் டயனா கமகேவின் கஞ்சா கதையை பகிடிக்காக கேட்டுள்ளனர்.



அப்போது பதிலளித்துள்ள டயனா கமகே, “சுவாமிகளே தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கஞ்சாவை ஊட்டுவதற்கு அல்ல, அரச அனுசரணையில் கஞ்சாவை பயிரிட்டு அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடியும். அது பற்றியே நான் பேசினேன்” எனக் கூறியுள்ளார்.



இதன்போது குறுகிட்ட பிக்கு ஒருவர், “ எமது சுவாமிகளுக்கும் காணிகள் இருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.



“அப்படியானால் அதிலும் கஞ்சா பயிரிடுவோம்” என டயனா கமகே குறிப்பிட்டுள்ளார்.



இறுதியில் அங்கு வந்திருந்தவர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டயனா, “ பிக்குமார் கஞ்சா பயிரிடுவதை எதிர்க்கின்றனரா என்று அறிந்துக்கொள்ளும் தேவை எனக்கும் இருந்தது. அவர்கள் எதிர்க்கவில்லை என்பது தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

.கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும

Jun06

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிர

Mar14

யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகரும் நகைக்கடை உரிமையாள

Mar09

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்

Feb01

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை

Jan19

மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக

Mar15

யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்ட

Mar28

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொரு

Oct04

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களி

Jun27

நாட்டில் இன்று(27) மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம ச

Oct07

நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் வீடு ஒன்றிலிரு

Feb04

எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே, கொரோனா – 19 தொற்

Aug30

உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எ

Sep19

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட

Apr10

மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 12 (10:45 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 12 (10:45 am )
Testing centres