சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியில் மின்சாரசபையை அண்மித்த பகுதியில் இன்று மதியம் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் மீது வானில் வந்தோர் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பித்துச் சென்றிருப்பதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரியைச் சேர்ந்த தவராசா சுபேசன் என்ற 27வயதான ஊடகவியலாளரே இவ்வாறு முகம் மற்றும் கைகளில் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்ட பின்னர் கச்சாய் வீதி ஊடாக சென்ற ஊடகவியலாளரை மோதிக்காயப்படுத்தும் வகையில் வான் ஒன்று ஊடகவியலாளர் பயணித்த மோட்டார் சைக்கிளின் முன்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் வானில் இருந்தவர்களில் ஒருவர் பொல்லுகள் மற்றும் கல் ஆகியவற்றால் ஊடகவியலாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு வானில் ஏறித் தப்பித்துச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க
இலங்கையில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் மீண்டும் கொண்
அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு மூன்று தவணைக
புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்
களுத்துறை, கமகொட, ஹோமடுவாவத்தையில் பகுதியில் 43 வயதுடைய
பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் உடலுறவு
அரசாங்கங்கள், கடந்த எட்டு வருடங்களில் பத்து விசேட ஜனா
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’
இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழ
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம
நாட்டை முடக்க வேண்டாம்; நாங்கள் பொறுப்பாக நடந்து கொள்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சி
இலங்கை மின்சார சபைக்கு 1500 மெற்றிக் தொன் எரிபொருளை வழங்
மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மன்னா