பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவதாக தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், பெண்களுக்கான ஆகக்குறைந்த திருமண வயதை 21 அல்லது 25 ஆக மாற்றியமைக்க வேண்டும் என முஸ்லிம் பெண்கள் யோசனையொன்றை முன்வைத்துள்ளனர்.
முஸ்லிம் பெண்கள் அமைப்பொன்றினால் இந்த யோசனை, “ஒரு நாடு ஒரு சட்டம்” ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
முஸ்லிம் பெண்கள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி, வைத்தியர் மரினா ரிஃபாய் மற்றும் ஊடகவியலாளர் சுபா காசிம் உள்ளிட்ட குழுவினரே இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.
இதன்போது, காதி நீதிமன்ற முறைமை குறித்தும் சில விடயங்களை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த நடைமுறையில் காணப்படும் குறைபாடுகள் திருத்தப்பட வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக தகுதியில்லாதவர்கள் காதி நீதிமன்றத்திற்கு நியமிக்கின்றமை பிரச்சினைக்குரியது என அவர்கள் கூறியுள்ளதாக அறிய முடிகின்றது.
அத்துடன், பெண்கள் திருமணம் செய்துக்கொள்ளும் ஆகக்குறைந்த வயது 21ஆக திருத்தியமைக்கப்பட வேண்டும் என வைத்தியர் மரீனா ரிஃபாய் தெரிவித்துள்ளார். அத்துடன், பெண்களின் திருமண வயது 25ஆக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என ஊடகவியலாளர் சுபா காசிம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அ
தற்போதைய நிலை தொடர்பிலான கலந்துரையாடல்கள் சில, ஜனாதிப
வவுனியாவில் இதுவரை 362 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண
முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்க
சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவ
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்ப
தமிழீழ விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூச
அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி பல்வேறு பகுதிகளி
நாட்டில் நாளைய தினம் இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்க
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளு
உடப்பு - கட்டகடுவ பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி ஒன்றரை
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெ