கலேவல-வீரகலவத்த பகுதியில் காதலித்த யுவதியை பார்க்கச் சென்ற இளைஞரொருவர் மீது யுவதியின் உறவினர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக கலேவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 28ம் திகதி ஹொரவ்பொத்தானை பிரதேசத்திலிருந்து இரண்டு வருடமாக பழகிய யுவதி வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததையடுத்து பார்வையிட சக நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அங்கு யுவதியின் உறவினர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தனது தலை முடியை வெட்டி தனக்கு காயம் ஏற்படுத்தியதாகவும் தெரிவித்து ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர் ஹொரவ்பொத்தானை- நிக்கவெவ சேர்ந்த கபூர் முகம்மட் சாகீர் (19வயது) எனவும் தெரியவருகின்றது.
இதேவேளை குறித்த தாக்குதல் நடத்தியவர் குறித்த பெண்ணின் தந்தை எனவும் அவருடன் பக்கத்து வீட்டார் இருவரும் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்தார்.
இது தொடர்பில் தாக்குதல் நடாத்திய குறித்த யுவதியின் தந்தையை தொடர்புகொண்டு கேட்டபோது இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு வந்து கதவை தட்டியதாகவும் இதனாலேயே தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஹொரவ்பொத்தானை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நி
எதிர்காலத்தில் மலேசிய வேலைவாய்ப்புக்களுக்கு மலையகத்
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 90 கிலோவுக்கு மேற்பட்ட
தனது மூத்த சகோதரனை கொடூரமாக தாக்கி கொன்ற இளைய சகோதரனை
சட்டவிரோதா மீன்பிடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்
அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னண
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக &nb
கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாரா
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறவு
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்த