இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று இலங்கை கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் கொழும்பு கடற்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.ஏ.ரி. சுபோதவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எல்.கே.டபிள்யூ.கமல் சில்வாவின் பணிப்புரைக்கமைய மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்காவிலன் வழிகாட்டலில் காவல்துறை குழுவினர் கடற்படையுடன் இணைந்து, சுமார் 15 தினங்களுக்கு மேலாக இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையிலேயே ஈரானில் இருந்து போதைப் பொருளை கடத்திவந்த கப்பலை கடலில் வைத்தே வழிமறித்துள்ளனர். இதன்போது, சுமார் 200 கிலோகிராம் போதைப் பொருளை, கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி போட்டுள்ளனர்.
இதன் போது, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களுடைய பாவனைக்காக வைத்திருந்த போதைப்பொருள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படு
அடர்ந்த காடுகளுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில்இ வனவளப
தாமரை கோபுரம் திறக்கப்பட்ட 15ஆம் திகதி முதல் நேற்று வரை
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூச
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றுமதி மு
எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும்
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் விமானப் படைச் சிப்பாய் ஒ
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையின் தேசிய
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 396 ப
நாட்டில் நட்புறவான வெளியுறவுக் கொள்கை இல்லாததுதான் த
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூ
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (