உக்ரைனில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகள் மீது ரஷ்யப் படைகள் குண்டு வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
அதன்படி மரியுபோல் நகரிலுள்ள திரையரங்கம் மற்றும் நீச்சல் தடாக வளாகம் மீது ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்கியுள்ளதாக, அந்நகர உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
அங்கு பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் பலர் குழந்தைகள், ரஷ்யத் தாக்குதலில் அந்த கட்டிடம் பலத்த சேதம் அடைந்துள்ளது.
ஆயிரம் பேர் வரை அந்தக் கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிர் பிழைத்தவர்களைக் காப்பாற்ற மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 22 ஆவது நாளாக தொடர்கிறது. அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்த யுத்தம் காரணமாக மக்கள் தஞ்சமடைந்துள்ள பள்ளிகள், திரையரங்குகள் மற்றும் சமூக மையங்களை குறி வைத்து ரஷ்யப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
இதேபோல் கிழக்கு உக்ரைன் நகரமான மெரேஃபாவில் ரஷ்யப் படைகள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 25 பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரி
மதிப்பிலான சரக்குகளுடன் மலேசியா வழியாக நெதர்லாந்து ந
தலைநகர் புதுடெல்லி ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற அனுமன
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்க
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடந
உக்ரைன் ரஷியா மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் அமைதி ம
அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் கேப்ரியல் சலாஜர் (வ
ரஷ்ய அதிபர் புடினால் உக்ரைனில் ஒரு நகரத்தை கைப்பற்ற ம
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
‘நேட்டோ விழித்தெழுந்து, இது ஒரு பிராந்திய மோதல் அல்ல.
பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை தந்தை சுட்டுக்கொன
உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கையில் எடு
ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்த
உக்ரைனிலிருந்து மற்றுமொரு தொகுதி ஏதிலிகள் விமானம் ஊட
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களுக்கு பொ
