ரஷ்யாவில் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படுவதாக உலக வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பிடி இறுகி வருகிறது.
பல நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதித்துள்ளன.
இந்நிலையில் ரஷ்யாவிலும், அதன் நட்பு நாடான பெலாரஸ் நாட்டிலும் அனைத்து திட்டங்களையும் உலக வங்கி அதிரடியாக நிறுத்தி உள்ளது.
இதுதொடர்பில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு மற்றும் உக்ரைன் மக்களுக்கு எதிரான விரோதத்தைத் தொடர்ந்து, உலக வங்கி குழு ரஷ்யா மற்றும் பெலாரசில் உள்ள அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விட்டது. இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கியபோது உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் கண்டனம் வெளியிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
அமெரிக்காவில் சமீப காலமாக பொது இடங்களில் துப்பாக்க
துனிசியாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்ற புலம்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது
உக்ரைனுக்கு எதிராக போரிட்டுவரும் ரஷ்யாவுக்கு எந்தவி
தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி சீன
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்த
இரண்டு வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்
96 மணி நேரத்தில் கீவ் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்
நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில்,
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம
அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்
உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும்
ஸ்லோவோக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றி கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுகிற குறைந்த வருமானம் க
