தற்போது மதுபான வகைகளை தயாரிக்க போதிய எத்தனால் கிடைப்பதில்லை என மது உற்பத்தி நிறுவனங்கள் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளன.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செவனகல, பெல்வத்த மற்றும் கலோயா சீனி தொழிற்சாலைகள் கரும்புகளை பயன்படுத்தி உள்நாட்டில் எத்தனோல் உற்பத்தி செய்கின்றன. மற்றொரு நிறுவனம் சோளத்தைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கிறது.
இருப்பினும், 2020 ஜனவரி முதல் எத்தனால் இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது. நாளாந்தம் 24,000 லீற்றர் எத்தனோல் உற்பத்தி செய்யப்படுவதாக கலோயா சீனி தொழிற்சாலையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
பெல்வத்த சீனி தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 20,000 லீற்றரும் செவனகல தொழிற்சாலையில் 18,000 லீற்றரும் உற்பத்தி செய்யப்படுகிறது.
டீசல் தட்டுப்பாடு மற்றும் மின் உற்பத்தி, இயந்திரங்களை வாடகைக்கு விடுவதால் ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாடு காரணமாக கல்ஓயா சீனி தொழிற்சாலைக்கு மேலதிக செலவுகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், திட்டமிட்டபடி எத்தனால் கிடைக்காவிட்டால், மார்ச் 22 முதல் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என, நாட்டின் முன்னணி மதுபான ஆலை கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அ
மக்களின் ஜனநாயக உரிமைக்கு புறம்பாக அரசாங்கம் செயற்பட
இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்த
சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையை பயன்படுத
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு, ந
நாட்டின் அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் இன்று எதி
இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ
நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்க
இந்த வார நாடாளுமன்ற அமர்வு, இன்றும், நாளையும் என இரு தி
ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் போலியான
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவ
இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களா