வட கொரியா தனது முதல் கொரோனா தொற்றுப் பரவலை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அந்த நாட்டில் தீவிர அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் நாடு முழுமையாக பூட்டப்படவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியாக கொரோனா பாரிய அழிவுகளை ஏற்படுத்தியபோதும், அணு ஆயுதம் கொண்ட வடகொரியா, கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டதாக அறிவிக்கவில்லை.
ஏனைய நாடுகளில் 2020 இல் தொற்றுநோய் ஆரம்பித்ததில் இருந்து வடகொரிய அரசாங்கம் அதன் எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்தநிலையில் தற்போது தலைநகர் பியோங்யாங்கில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், கொரோனாவுடன் ஒத்துப்போவதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்தே ஜனாதிபதி கிம் ஜோங் உன் உட்பட உயர் அதிகாரிகள் இன்று நெருக்கடி நிலையை அறிவித்துள்ளனர்.

இருப்பினும் கட்டுப்பாடுகள் பற்றிய விவரங்கள் உடனடியாக வழங்கப்படவில்லை.
இதேவேளை ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனா மற்றும் ரஷ்யா வழங்கும் தடுப்பூசிகளை வட கொரியா நிராகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தன்னை விமர்சித்து கட்டுரை எழுதிய பெண் நிருபரை, அமெரிக
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிட
சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்
இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றா
ஆப்கானிஸ்தானில்
மஹ்சா அமினி என்ற இளம் பெண் பொலிஸ் காவலில் இறந்ததை எதிர கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்ம உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய ப பிரிட்டனில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்
