எதிர்வரும் மே 18ஆம் திகதி இலங்கையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக, இலங்கை, இந்திய புலனாய்வு அமைப்புகளிடம் விபரங்களை கோரியுள்ளது.
இலங்கையில் மே 18ஆம் திகதி விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி 2022ஆம் ஆண்டு மே 13ஆம் திகதியன்று தெ இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த தகவல் குறித்து, இந்திய புலனாய்வுப் பிரிவினர், விசாரணை மேற்கொண்டு இலங்கைக்கு அறிவிப்பார்கள் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் ஏனைய அனைத்துத் தகவல்களும் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
அதேநேரம், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நீலகிரி எம்.பி. ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின் போது முதலமை
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு
மதுரைக்கு காரில் மூட்டை மூட்டையாக கலர் ஜெராக்ஸ் எடுத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு த டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிரா மதுரையில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகை இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பிய
