இலங்கையில் தற்போதைக்கு கையிருப்பு முற்றாக காலியாகிப் போயுள்ள அத்தியாவசிய மருந்துப் பொருளை சீனா அன்பளிப்புச் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.
எனோக்சபரின் சோடியம் எனப்படும் இந்த மருந்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அத்தியாவசியமானதாக காணப்படும் போதும் தற்போதைக்கு இலங்கையில் எந்தவொரு இடத்திலும் கிடைக்காத நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பத்து இலட்சம் சீன யுவான்கள் பெறுமதியான இந்த மருந்துகள் அடங்கிய சிரிஞ்சுகளை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக சீனத் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதன் இலங்கைப் பெறுமதி 54 கோடி ரூபாவாகும். இந்த அன்பளிப்புத் திட்டத்தின் கீழ் சீன அரசாங்கத்தினால் 512,640 சிரிஞ்சுகள் எனொக்சபரின் சோடியம் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
இலங்கையின் ஆறுமாத கால மருந்துத் தேவையை அதனைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
மருந்துப் பொருட்கள் இரண்டு கட்டங்களாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக இன்றைய தினம் 256,320 சிரிஞ்சுகள் இலங்கையை வந்தடையவுள்ளன.
இரண்டாவது கட்ட மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு இந்த மாத நடுப்பகுதியில் இலங்கையை வந்தடையும் என்றும் சீனத் தூதரகம் விடுத்துள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் அதிபர்
இங்கிலாந்து, இந்தியா இடையேயான பயண கட்டுப்பாட்டு விதிம உக்ரைனுக்கு எதிரான போரில் உணவை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந் உக்ரைனின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட கன்னிவெடிகள இத்தாலி நாட்டின் தெற்கே மத்திய தரைக்கடல் பகுதியில் அம உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவு அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய நீண்ட தூர மூலோபாய அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் மெக்சி கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 84 வயதான போப் ஆண்டவர் நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கும் திட்டத்த தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக அமெரிக்க நீண்ட தேர்தல் நடைமுறைதான் மேற்கு வங்காள கிராமப்புற பக சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 14,200 ரஷ்ய வீர
