எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் ஏற்ற இறக்கமான எரிவாயு விலை மற்றும் டொலரை கருத்தில் கொண்டு விலை சூத்திரமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலை உயர்வினால் ஏற்பட்ட நட்டத்தை நாட்டு மக்கள் அனைவரும் செலுத்த வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படுவதால், எரிவாயு விலையில் ஏற்படும் மாற்றங்களை அந்த நுகர்வோர் மட்டுமே ஏற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படாமையால், கடந்த 8ஆம் திகதி இலங்கை வந்திறங்கிய கப்பலில் நேற்றும் எரிவாயுவை இறக்க முடியவில்லை.
இதனால், சமையல் எரிவாயு சிலிண்டர்களை இன்று சந்தைக்கு வெளியிடப்போவதில்லை என லிட்ரோ தெரிவித்துள்ளது.
எரிபொருளுக்காக பொது மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிற்றோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர். கடந்த நாட்களில் எரிவாயு கிடைக்காமையினால் போராட்டங்களில் மக்கள் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உத
யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமை
வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங
எதிர்வரும் நாட்களிலம் நாடு முழுவதும் கடும் வெப்பமான க
ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு
மஹாபொல உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரம
ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுந
இலங்கை அரசு கோரிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்
வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக இருவர் மரணமடைந்துள
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள
இலங்கையில் இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்த
நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப்
கரிபீயனில் ஒரு சிறிய இரட்டை தீவு தேசமான செயிண்ட் கிட்
அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பாரிய நிதி நெருக்கடியின்