நாட்டில் தற்போது நடந்து வரும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட வேலைத்திட்டத்தின் முன்னணி சமூக ஊடக செயற்பாட்டாளராக கருதப்படும் திசர அனுருத்த பண்டாரவை நேற்றிரவு அவரது வீட்டுக்கு சென்றவர்கள் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்திச் செல்வதற்காக சிவில் உடையில் வீட்டுக்கு சென்றவர்கள் தாம் முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் என தம்மை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து திசர அனுருத்த பண்டாரவிற்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் விசாரித்துள்ளனர். எனினும் அப்படியான எவரும் கைது செய்யப்படவில்லை பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இளம் ஊடகவியலாளர்களின் சங்கம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளைஞர்,முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக பொலிஸார், மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இன்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்கள் எட்டாம் வக
மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டி
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 90 கிலோவுக்கு மேற்பட்ட
தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண
இலங்கை பாராளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரும் முன்னாள் ப
புகையிரத நிலைய அதிபர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து ந
கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளும
22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன
தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வ
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
இலங்கை மத்திய வங்கி பெருந்தொகை பிணை முறிகளை விற்பனை ச
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொ
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்ட