உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளது. ரஷியா உடனான இந்த போரில் உக்ரைனின் 45 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இதில் 26 லட்சம் பேர் அண்டை நாடான போலந்துக்கும், 7 லட்சம் பேர் ருமேனியாவுக்கும் அகதிகளாக சென்றுள்ளனர்.
வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். பிரார்த்தனைக்கு பிறகு தேவாலயத்தில் உரையாற்றிய போப் ஆண்டவர் பிரான்சிஸ், உக்ரைன் போர் குறித்து வேதனையுடன் பேசினார்.
போரின் முட்டாள்தனத்தில் கிறிஸ்து மற்றொரு முறை சிலுவையில் அறையப்படுவதை காண்கிறோம். கணவன் மற்றும் மகன்களின் அநியாய மரணம், வெடிகுண்டுகளில் இருந்து தப்பிச் செல்லும் அகதிகள், எதிர்காலத்தை இழக்கும் இளைஞர்கள் ஆகியவையே முட்டாள்தனமான போரின் விளைவுகள். எனவே போரை நிறுத்துங்கள் என குறிப்பிட்டார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது நாட்டு மக்களின் தைரியத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷியா தீமை செய்வதில் மிகப் பெரிய நாடு என்றால், உக்ரைன் தைரியத்தில் பெரிய நாடு என தெரிவித்தார்.
உக்ரைன் மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ரஷிய வீரர்கள் மற்றும் அவர்களின் தளபதிகளே பொறுப்பேற்க வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும். அனைத்து ரஷிய வங்கிகள் மீதும் பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் தடைகள் விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தன்னிடம் தகாத
இந்தோனேசியாவில் 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க
ஆப்கானிஸ்தானில் கணவர் துன்புறுத்துவதாக கூறி ஏராளமான
மத்திய ஹிரான் பகுதியில் அமெரிக்கப் படைகளின் ஆதரவைப் ப உலகப் புகழ் பெற்றவர், அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்ன கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் பொலிஸாரால் க இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எத ரஷ்ய இராணுவப் படைகள் உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களில மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் பொருளாதார சீர்கேடு, கொ டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறி மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய ஜப்பான் நாட்டில் நேற்று 7.3 ரிக்டர் அளவுகோலில் பயங்கர ந ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தில், ரஸ்யா நிர்வ
