ஜனாதிபதி பதவி விலக வேண்டும் மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட ஜனநாயக மாற்றங்களை கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டத்தின் 19 ஆவது நாள் இன்றாகும்(27).
18 நாட்கள் கடந்தும் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்சி சார்பற்ற போராட்டத்தில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கையில் தொய்வு ஏற்படவில்லை.
ஜனாதிபதி செயலகத்தின் பிரதான வாயிலை மறித்து மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலைஞர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
கோட்டாகோகம என பெயரிடப்பட்டுள்ள பகுதியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இதனிடையே, மக்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கையின் மற்றுமொரு கட்டத்தை அலரி மாளிகைக்கு முன்பாக மைனாகோகம என்ற பெயரில் ஆரம்பித்துள்ளனர்.
இந்தநிலையில், தாம் இராஜினாமா செய்யப்போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்று(26) அறிவித்திருந்தார்.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொரு
உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை ட
எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 9ஆம் தி
இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி
இலங்கையின் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுடையவர்களின
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொ
கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளும
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டுக்க
ஜப்பான் அரசின் நிதியுதவியில் யாழ். பல்கலைக்கழக கிளிநொ
பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்ப
இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகள
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஆண் ஒருவர் மர
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்
நேற்று (07) தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 617 பேர் கைது செய