“இந்தியாவும், சீனாவும் பகையாளிகள் அல்ல கூட்டாளிகள்” என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு கடந்த வியாழக்கிழமை (25)ஆம் திகதி சீன வெளியுறவுத் துறை அமைச்சர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இவ் விஜயம் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர்,
“இரு தரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை வரையறுக்கவோ அல்லது தடுக்கவோ அனுமதிக்கக்கூடாது.
இரண்டு நாடுகளும் ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதி செய்வது மற்றும் நடைமுறை சிக்கல்களை சரியான விதத்தில் கையாண்டு தீர்த்து வைப்பது போன்றவற்றில் ஒருமித்த கருத்தை கடைபிடிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன” என இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும், சீன வெளியுறவுத் துறை அமைச்சரின் இவ் விஜயத்தின் போது தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆகியோரை சந்தித்து இந்திய- சீன உறவு முறை தொடர்பிலான கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார்.
தேனி மாவட்டம் போடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்
75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் எர்பைய
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் எழுந்துள்ள மோசமா
மத்திய நிதி மந்திரி
கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை ந இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங் புதிய நிதியாண்டு முதல் 3 இலவச கியாஸ் சிலிண்டர் விநியோக அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக ந பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) ஆதார் எண்ணுடன் இணைப்பதற தமிழகத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு அனைவர் முன்ன
