பாடசாலைக்கு சாப்பிடாமல் பட்டினியில் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை தொழில் சார் பாடசாலை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட போஷாக்கு வேலைத்திட்டமும் தற்போது நின்று போயுள்ளதாக இலங்கை தொழில் சார் பாடசாலை அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுஜீவ விமலரத்ன தெரிவித்துள்ளார்.
புத்தகங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதுடன் காலணிகளின் விலைகளும்,பாடசாலை சீருடைகளின் விலைகளும் 200 வீதமாக அதிகரித்துள்ளது.
அத்துடன் உணவுகளின் விலைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளன. சில மாணவர்கள் காலையில் பாடசாலையில் நடக்கும் கூட்டத்தின் போது மயங்கி விழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மயங்கி விழும் மாணவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் காலையில் உணவு சாப்பிடவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் காலையில் உணவு சாப்பிடாமல் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் ஒரு வகுப்பில் சுமார் நான்கு பேர் வரை இருந்தனர்.
தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோரால் பிள்ளைகளுக்கு ஒரு வேளை உணவை கூட வழங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது எனவும் விமலரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் அதிகரித்து வர
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 3
கடன் திட்ட அடிப்படையில் பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்ல
இந்தியாவில் இருந்து டீசல் ஏற்றிய கப்பல் இலங்கையை வந்த
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின
நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப்
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளு
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்
வாகனங்களுக்கான கேள்வி குறைந்துள்ளதால் சந்தையில் வாக
வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைக
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதிய
இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவத
காலி முகத்துவாரப் பகுதியில் 70 இலட்சம் ரூபா பெறுமதிய
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்பட
மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதி