யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு 1 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் கடந்த 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் பொது சுகாதார பரிசோதகரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 10 வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்கள் மீட்கப்பட்டன.
அதேவேளை நல்லூர் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு வர்த்தக நிலையத்தில் இருந்து காலாவதியான பொருள் மீட்கப்பட்டன.
குறித்த இரு பொது சுகாதார பரிசோதகர்களினாலும் தமது பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது காலாவதியான பொருட்களை கடைகளில் வைத்திருந்த உரிமையாளர்களுக்கு எதிராக நேற்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணையின் போது 11 கடை உரிமையாளர்களும் தமது குற்றத்தினை ஏற்றுக்கொண்டதை அடுத்து மன்றினால் உரிமையாளர்களுக்கு மொத்தமாக 1 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
இலங்கையில் டெங்கு வைரஸிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளத
இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச
கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின
ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (Prof. G L Peiris) இந
பசறை - கோனகெலே தோட்டத்தில் 18 வயதுடைய மகனை கத்தியால் வெட
சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களை வெளிநா
யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழி
இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏ
2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும்
பின்னவல மற்றும் மஹா ஓயா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிட
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு ப
லிட்ரோ நிறுவன எரிவாயு விலை அத
இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அவரத
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று (01) முதல்