More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • இறுதிப் போட்டிக்குள் அயெடுத்து வைத்தது இலங்கை அணி!
இறுதிப் போட்டிக்குள் அயெடுத்து வைத்தது இலங்கை அணி!
Oct 01
இறுதிப் போட்டிக்குள் அயெடுத்து வைத்தது இலங்கை அணி!

வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை ஜாம்பவான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.



ராய்பூரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை ஜாம்பவான் அணியும் மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.



இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.



இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஜாம்பவான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.



இதில் அணியின் அதிகப்பட்சமாக இசாம் ஜெயரத்ன 31 ஓட்டங்களையும் சனத் ஜெயசூரிய 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் அணியின் பந்துவீச்சில், சாண்டோகி மற்றும் பிஷோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டெரன் பவல், ஜெரோம் டெய்லர், டுவைன் ஸ்மித் மற்றும் பென் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இதனைத்தொடர்ந்து 173 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இலங்கை ஜாம்பவான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.



இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக நார்சிங் டியோனரின் 63 ஓட்டங்களையும் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



இலங்கை ஜாம்பவான் அணியின் பந்துவீச்சில் நுவான் குலசேகர மற்றும் சனத் ஜெயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் இசுரு உதான, டில்சான் மற்றும் அசேல குணரதன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இப்போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை ஜாம்பவான் அணியின் நுவான் குலசேகர தெரிவுசெய்யப்பட்டார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar05

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே ந

Sep03

இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று கொடுத்துள

Mar08

ஐபிஎஸ் ஜூரம் ஆரம்பித்துவிட்டது. அணிகள் ஏலத்திற்குப் ப

Jul10

நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடை

Aug04

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில

Apr16

ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், ராஜஸ்தான்

Feb16

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையி

Dec22

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரி

Jan25

டோயோட்டா தாய்லாந்து ஓபன் (Thailand Open) சர்வதேச பேட்மிண்டன் போ

Feb12

இந்திய பெங்களுரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத

Feb05

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை

Apr15

ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ

Jul14

வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி

Jan25

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போ

Oct16

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (07:49 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (07:49 am )
Testing centres