நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டும் எனவும், அதற்கு சரியான தகவல்களை மக்களுக்கு வழங்குவது அவசியமானது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களின் ஊடகச் செயலாளர்களுக்கு அரச தொடர்பாடல் பொறிமுறை தொடர்பில் அறிவிக்கும் செயலமர்வு நேற்று (வெள்ளிக்கிழமை) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஊடகங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் பலர் இதில் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் பேசியது போதும் என்றும் தான் கூறுவதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்றும் அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மிகவும் கடினமான காலங்களில் இருக்கிறோம் என்றும், அதிலிருந்து மீண்டு வருகின்றபோதிலும் பலர் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரியான தகவல்களை வழங்குவதன் மூலம் நாட்டில் ஸ்திரத்தன்மையை கொண்டு வர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய மிகப்பெரிய பிரச்சினை மின்னணு ஊடகங்களோ அல்லது அச்சு ஊடகங்களோ அல்ல என்றும் சமூக ஊடகங்களே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நியாயமற்ற வரிவிதிப்பு மற்றும் அரசின் தன்னிச்சையான நட
மேல் மாகாணத்தில் புகை பரிசோதனையில் தோல்வியடைந்த பல வா
தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை கோரி இலங்கை
வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில
அடுத்த வருடம் பெப்ரவரிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட
நுவரெலியா, ஹோர்டன் சமவெளி வீதியில் பட்டிப்பொல பிரதேசத
மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளி
வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் 6 பேர் உட்
மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந
நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலைய
அமைச்சர் நாமல் ராஜபக்ச, 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம
ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச தனது தந்தையை
இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படு