இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான மருந்து திரவங்கள் இலங்கையில் பயன்பாட்டில் இல்லை என்று தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடுமையான விதிமுறைகளை கருத்திற்கொண்டு உயர்தர மருந்துகளை மாத்திரமே இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் காம்பியாவில் ஒரு வகை இருமல் மருந்து காரணமாக 70 குழந்தைகள் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. பின்னர் இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து திரவங்களால் சுமார் நூறு குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்தோனேசிய அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிரப் ஒன்றில் சிறுநீரகத்துக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த மருந்தைப் பெற்ற 200 குழந்தைகளை பரிசோதித்ததில் அவர்களுக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சல
கண்டி - முல்கம்பொல, மேம்பாலத்திற்கு அருகில் நேற்று (26) ர
சுகாதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும
கசினோ நிலையங்களுக்கான வருடாந்த வரி 20 கோடியிலிருந்து 50
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித
வென்னப்புவ பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளா
இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடும
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த
இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்ப
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு வி
இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய
எம்மை நெருக்கடிக்குள் தள்ள சூழ்ச்சிகளை சர்வதேசம் முன