தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதைப் போல் பொங்கலுக்கு மேலுமொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், 'நானும், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றியும் கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் ஜனாதிபதியுடன் உரையாடினோம்.
பொலிஸ் பதிவு பற்றி மீண்டும் ஒருமுறை ஐஜிக்கு பணிப்பதாக ஐனாதிபதி கூறினார். தீபாவளி தினத்தன்று விடுவிக்கப்பட்டதை போல் பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி கூறினார்.
அருகிலிருந்த பிரதமர் மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க, யோகராஜன் ஆகியோரும் சாதகமான கருத்துக்களை பகிர்ந்தனர்.
மலையக மக்கள் மத்தியிலான, பெருந்தோட்ட பிரிவினர் பற்றி நான் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த பிரேரணை பற்றி ஜனாதிபதி அறிந்திருந்தார்.
பெருந்தோட்ட பகுதிகளிலேயே 51 வீத உணவின்மை பிரச்சினை காணப்படுகிறது என கூறினேன். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய, செயலணி ஒன்றை அமைக்க கோரினேன். ஜனாதிபதி கொள்கைரீதியாக உடன்பட்டார்' என மேலும் தெரிவித்துள்ளார்.
கொலன்ன பகுதியில் கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைக
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித
களுத்துறை, கமகொட, ஹோமடுவாவத்தையில் பகுதியில் 43 வயதுடைய
இந்தியா - தமிழ்நாடு ,திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து
இன்று காலை 6,00 மணிமுதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தலிலி
ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமிக்க பயணத்தை நோக்கி ந
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்கும
இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட
இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெ
இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை ச
தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி அமெரிக்கா போன்ற ந
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய
களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்க
வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆயிரத்து 800 ப
ஊடகங்களை அடக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என எத