எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, எதிர்க் குழுக்களைக் கொண்ட ஒரு பரந்த அரசியல் கூட்டணி இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் டலஸ் அழகப்பெருமவின் சுதந்திர மக்கள் காங்கிரஸ், விமல் வீரவன்சவின் உத்தர லங்கா சபாகய, அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான அணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் 43 வது படையணி மற்றும் ஸ்ரீலங்கா மகாஜன கட்சி ஆகியவற்றுக்கு இடையில் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
மின்சாரக் கட்டண உயர்வுக்கு மத்தியில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் தரப்பு தகவல்
முன்மொழியப்படவுள்ள இந்த கூட்டணி கடந்த காலத்தில் கூட்டணிகளைப் போல ஒரு பிரதான கட்சியைச் சுற்றி அணிதிரள்வதற்கான மரபிலிருந்து விலகிச் செல்ல உள்ளது.
கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை இணைத்தலைவர்கள், தலைமைத்துவ சபை அல்லது அனைத்து குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் குழுவிற்கு வழங்குவதற்கான முன்மொழிவுகள் கலந்துரையாடல் மட்டத்தில் உள்ளன.
இந்தநிலையில் அடுத்த சில நாட்களுக்குள் அந்த முன்மொழிவுகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் 74 வது ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 3ம்,4
குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் மனைவி கோடரியால் த
இலங்கையில் பால் மா பொதி ஒன்றின் விலை மீ்ண்டும் அதிகரி
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 2ஆம் வருட நினைவு தினத்தை முன
2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 ம
நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
மட்டக்களப்பில் முககவசம் அணியாதவர்களை கண்டறியும் விச
விஸ்கி அருந்திக்கொண்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவ
உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்றைய
இராணுவத்தினரால் நடத்தப்படும் 94 தனிமைப்படுத்தல் நிலைய
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரம