ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அக். 16ம் தேதி தொடங்கி நவ. 13ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில், இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையில் களமிறங்குகிறது. மொத்தம் 15 பேர் அடங்கிய அணியில் துஷ்மந்த சமீரா, லாகிரு குமாரா இடம் பெற்றுள்ளனர். காயத்தால் அவதிப்பட்டு வரும் இவர்கள், விரைவில் உடல்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை டி20 தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளதால், உலக கோப்பையில் அந்த அணி மீதான எதிர்பார்ப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. அக். 16ம் தேதி தெற்கு கீலாங் மைதானத்தில் நடக்க உள்ள தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கை அணி நமீபா அணியுடன் மோதுகிறது. இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), பானுகா ராஜபக்ச, சமிகா கருணரத்னே, தனுஷ்கா குணதிலகா, தனஞ்ஜெயா டிசில்வா, துஷ்மந்த சமீரா, பதும் நிஸங்கா, வனிந்து ஹசரங்கா, லாகிரு குமாரா, குசால் மெண்டிஸ், மகீஷ் தீக்ஷனா, தில்ஷன் மதுஷங்கா, சரித் அசலங்கா, ஜெப்ரி வாண்டர்சே, பிரமோத் மதுஷன்.
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ
அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம
சர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிம
நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இ
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே
ஐ.பி.எல். 2022 டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. ய
ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5
20 உலக கிண்ண போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இர
ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து தீபக் சாஹரை தொ
ஐ.பி.எல். போட்டியில் கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அண
இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அ
