பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடியாது என தெரிவித்து சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணத்திலையே அதிகளவான பிள்ளைகளை சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பெற்றோர் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் 2021 ஆம் ஆண்டு 158 பிள்ளைகள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டின் அரையாண்டு கால பகுதிக்குள் 246 பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை யாழ்.மாவட்டத்தில் 124 பேரும் , கிளிநொச்சி மாவட்டத்தில் 62 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 45 பேரும் , மன்னார் மாவட்டத்தில் 07 பேரும் வவுனியா மாவட்டத்தில் 08 பேருமாக 246 பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
மேலும் பெற்றோரின் பொருளாதார நிலைமைகளை அறிந்து உண்மையில் அவர்களால் பிள்ளைகளை பராமரிக்க முடியாதா என்பதனை உறுதிப்படுத்திய பின்னர் வடமாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறுவர் இல்லங்களில் பிள்ளைகளை சேர்க்க அனுமதிப்போம் எனவும் வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் இ.குருபரன் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளு
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட
கொலன்ன பகுதியில் கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைக
நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய ச
யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமை
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி
இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த
நாட்டிலுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழு
நாட்டில் கடந்த இரண்டு தினங்களில் இடம்பெற்றுள்ள வீதி வ
விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் ச
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23ஆம் திகதி
பனாமுற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூலஎடியாவல பிரதேசத்த
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொர
அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப