தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமையானது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் களுத்துறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ராஜித்த சேனாரத்ன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, சர்வமதத் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இரா.சாணக்கியன் இவ்வாறு விசனம் வெளியிட்டுள்ளார்.
சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்வதானது தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சில பிரதேசங்களில் பால்மாவுக்கு மீண்டும் தட்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் ந
மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா விருது பெற்ற
பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப
என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான ந
ஹுங்கம கடற்பரப்பில் ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உ
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ
நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேற
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின்
வன இலாகாக்குரிய காணியாக இருந்தாலும் அக் காணிககளை அமைச
தற்போது மதுபான வகைகளை தயாரிக்க போதிய எத்தனால் கிடைப்ப
கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்த
இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொ