More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் போராட்டம் ஒரு போலிப்போராட்டம் – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்!
சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் போராட்டம் ஒரு போலிப்போராட்டம் – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்!
Sep 26
சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் போராட்டம் ஒரு போலிப்போராட்டம் – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்!

சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒரு போலிப்போராட்டம் என வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.



இது தொடர்பாக வவுனியாவில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்துகருத்து தெரிவித்த அவர்கள்.



எமது தொடர்ச்சியான போராட்டம் இன்று 2044வது நாளை எட்டியுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை சிங்களவர்கள் ஒருபோதும் அகற்ற மாட்டார்கள். PTA என்ற பெயரை தேசிய பாதுகாப்பு சட்டம் என்று மாற்றுவது பற்றி ஒரு பேச்சு உள்ளது.



 இது சர்வதேச சமூகங்களை குறிப்பாக ஐரோப்பிய ஒ.ன்றியம் மற்றும் அமெரிக்காவை ஏமாற்றும் செயற்பாடே,சுமந்திரன் யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு ஆதரவாக இருந்தமை ஒரு விசித்திரமான நடத்தையாகும்.



அவர் தனது கற்பனைதமிழ் எதிரிகளிடமிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தினார். அவர் ஒரு சூழ்ச்சிப் பொய்யர் மற்றும் தமிழரை ஏமாற்றுபவர் என்பதை நாம் நிரூபிக்க முடியும்.



சர்வதேச விசாரணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டதாக கூறிய அவர் இப்போது சர்வதேச விசாரணைக்கு ஐ.சி.சி. அழைப்பு விடுக்கும் என்று கூறுவதன் மூலம் அவர் ஒரு பெரிய பொய்யர் என்பதை காட்டுகிறார்.



போருக்குப் பின்னர் நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட காலத்தில் திரு.சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி 25 தமிழர்களைக் கைது செய்தார். 30 தொடக்கம் 40 வரையிலான சிங்கள விசேட அதிரடிப்படையினரை தமிழ் எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாக்க சுமந்திரன் பயன்படுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரியும்.



அவர் எப்போதும் தமிழ் தேசியத்தை எதிர்க்கும் மக்களுக்கு உதவுகிறார். இதனால்தான் அவர் கேகேஎஸ்லிருந்து அம்பாந்தோட்டை வரை கையொப்பங்களை சேகரிப்பதற்காக ஒரு பெரிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். தனது அரசியலுக்காகவும்இ கொழும்பில் ஒரு தமிழனாக தனது பாதுகாப்பான வாழ்வுக்காகவும் சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் அவர் திருப்திப்படுத்துகிறார்.



சிங்களக் கொடூரச் சட்டத்திலிருந்து எம்மை விடுவிப்பதற்கும் எமது தாயகத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கும் இன்னும் பல தேவைகளுக்கும் தமிழ் இறையாண்மை வேண்டும்.தமிழர்களுக்கு உதவ முன் வாருங்கள் என்று ஒவ்வொரு தமிழனும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை அழைக்க வேண்டும்.' என்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep24

யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள ந

Jan30

நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து

Oct08

இலங்கையில் இருந்து 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமா

Mar09

7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா

Apr06

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர் போல் நடித்த

Sep20

தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெரு

Sep22

இலங்கைக்கு கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்ட 10 கொள்க

May03

மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்த

Apr01

கொழும்பு - மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிப

May13

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 2 கொரோனா தொற்றாளர

Sep22

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட

Sep27

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய கு

Oct04

தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தன

May22

இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த

Jan18

இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்ட

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 12 (12:40 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 12 (12:40 pm )
Testing centres