வவுனியா, குட்செட் வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேரின் சடலங்கள் பொலிஸாரால் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
இன்றையதினம் குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
எனினும் அவர் பதிலளிக்காததை அடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது குறித்த வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது சிறுவயதான இருபிள்ளைகள், மனைவி ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தமையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த 42 வயதான சிவபாதசுந்தரம் கௌசிகன் வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான 36 வயதுடைய கௌ.வரதராயினி, இரு பிள்ளைகளான கௌ. மைத்ரா (வயது 9), கௌ.கேசரா (வயது 3) ஆகியோர் உறங்கிய படியும் சடலமாக மீட்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா பொலிஸார் மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களில் கோவிட் தடுப்பு செயலூக்கியினை பெற
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்
யால வன சரணாலயத்தில் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்றை சுற்ற
கொவிட் வைரஸ் தாக்கத்தை அரசாங்கத்தால் மாத்திரம் தனியா
ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ண
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறவு
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 130 ப
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளி
சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொ
'நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பண மோசடி
இத்தாலிக்கான சிறிலங்காவின் தூதவராக நியமிக்கப்பட்டுள
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்த
எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க