ஊவாபரணகம - மஸ்பன்ன கிராமத்தில் உள்ள வீடொன்றில் கட்டில் ஒன்றைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மரத்தினாலான தடுப்பில் சிக்கி ஏழு மாத பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மஸ்பன்ன, வெலேக்கடே பகுதியில் ஹர்ஷனி மதுஷிகா என்ற ஏழு மாத பெண் குழந்தையே படுக்கையில் இருந்து தடுப்பு பட்டிக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த குழந்தையின் தாய் வீட்டில் வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில், குழந்தை உறங்கிக் கொண்டிருந்த படுக்கைக்கு அருகில் வந்து பார்த்தபோது, கட்டிலைச் சுற்றியிருந்த மர தடுப்பில் குழந்தை மாட்டிக்கொண்டுள்ளது.
இதையடுத்து குழந்தை மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊவாபரணகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காவற்துறையினரால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெற
மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப
சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும்
முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இர
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியா
யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் ப
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டித்தன்மை
கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கட்டாயம
புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் ப
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ
ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொ
வொஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் உலக வங்கிய
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டிற்கு தேவையான சீனி மற்ற
இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமு
இலங்கையில் அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும