குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியரசு தினம் இம்மாதம் 26 ஆம் திகதி நடைபெறுகிறது. இதன்போது இந்திய விமானப்படையின் 38 போர் விமானங்களும், இராணுவத்தின் 4 விமானங்களும் விண்ணில் அணிவகுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முதன்முறையாக இந்த ஆண்டு ரஃபேல் போர் விமானங்கள் இடம் பெறப்போவதாக விங் கமாண்டர் இந்திரானில் நந்தி தெரிவித்துள்ளார்.
‘வெர்டிகல் சார்லி பார்மேஷன்’ என்று சொல்லப்படுகிற வகையில் ஒற்றை விமானமாக இந்த ரஃபேல் போர் விமானம் குறைவான உயரத்தில் பறந்து மேலே செல்லும். அது அதிக உயரத்தில் நிலைபெறுவதற்கு முன்பாக சாகசங்களை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஃபேல் போர் விமானம், பிரான்ஸ் நாட்டில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகை
போர் தீவிரமடைந்து வருவதால் உக்ரைனில் இருந்து உடனடியா
தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர
இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறையில் இருந்து,
ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் த
மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் டாக்டர் இந்திரா (வயது 60). இவர
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் மகாத்மா காந்தியி
டோனியர் கண்காணிப்பு விமானங்களை இலங்கை கொள்வனவு செய்ய
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020-ம் ஆண
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவி
தமிழகத்தை உலுக்கிய புதுக்கோட்டை சிறுமி துஷ்பிரயோகம்
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சூரஜ்குமார் மிதி
பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்திய தூதகரகத்தில், இ
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள கேரளாவில் காங்கிரசி
