More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மன்னார் மாவட்டத்தில் 100இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள்:
மன்னார் மாவட்டத்தில் 100இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள்:
Jan 23
மன்னார் மாவட்டத்தில் 100இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள்:

இரண்டாவது கொரோனா தொ்றறாளர் மரணம் நேற்று பதிவாகியுள்ளதுடன், மன்னார் மாவட்டத்தில் தொற்று நிலை அதிகரித்து வருவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக அவர் கூறுகையில், “மன்னார் மாவட்டத்தில் நேற்று மேலும் 23 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.



இவர், கடந்த வாரம் மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் விடுதி இலக்கம் இரண்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். குறிம்ம விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டமையினால் இவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



எனினும், பி.சி.ஆர். பரிசோதனையின்போது தொற்று இல்லையென முடிவு வந்ததுடன் அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.



இந்நிலையில், இவருக்கு நேற்று முன்தினம் இரவு சடுதியாக நோய் நிலை அதிகரித்தது, மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டுவரும் வழியில் உயிரிழந்தார்.



உயிரிழந்த பின்னர் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மன்னார் மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் இரண்டாக உயர்ந்துள்ளன.



அத்துடன், இம்மாதம் தொடக்கத்திலிருந்து மன்னார் மாவட்டத்தில் இரண்டாயிரத்து 849 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மொத்தமாக ஏழாயிரத்து 649 பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.



இந்நிலையில், தற்போது ஒவ்வொரு நூறு பி.சி.ஆர். பரிசோதனைகள் சமூகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற போது 3.9 வீத கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள். இது, மன்னார் மாவட்டத்தில் தொற்று பரவலின் நிலை அதிகரித்துக் காணப்படுவதை எடுத்துக் காட்டுகின்றது.



எனவே, மக்கள் அவதானத்தோடும் பொறுப்போடும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும்” என வைத்தியர் வினோதன் அறிவுறுத்தியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun19

கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழை

Feb12

முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் தாம் வட கொரியாவில் இ

Mar27

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து விடயங்களும் கண்டறி

Oct08

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ

Apr07

இலங்கையின் 74 வது  ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 3ம்,4

Jan13

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடம் ஒன்றில் இடம்பெ

Aug29

பருத்தித்துறை, மந்திகை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் ப

Sep24

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மைய குழுவினால் வெள

Mar09

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறை

Apr05

அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கர

Jun10

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குப் போத

Sep22

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்பு

Mar30

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின

Feb01

73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், அரச மற்றும

Sep15

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 12 (10:31 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 12 (10:31 am )
Testing centres