சேலம் உருக்காலை நிர்வாகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து உருக்காலை INTUC தொழிற்சங்க ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை மத்திய அரசு தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து சேலம் உருக்காலை ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இன்று உருக்காலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து சேலம் INTUC சார்பில் 100 க்கும் மேற்பட்ட உருக்காலை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உருக்காலை வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உருக்காலையை தனியார் மயமாக்குவதை கை விட வேண்டும், செயில் நிர்வாகத்தின் பங்கு விற்பனையை கைவிட வேண்டும், ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், ஊழியர்கள் ஆள் பற்றாக்குறையை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசையும், செயில் நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து ஊழியர்கள் கூறும் போது உருக்காலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அடுத்த வாரத்தில் உருக்காலையை பார்வையிட தனியார் நிறுவனங்கள் வர உள்ளதாக தகவல் வந்துள்ளது. அவ்வாறு வரும் பட்சத்தில் அவர்களை பாரவியிட ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாம
வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 74). 3 ம
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்த
இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப்
கேரளாவில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் கூடல் மாணிக்கம
மராட்டியத்தில் இந்த மாதம் முதல் வாரம் வரை கொரோனா பாதி
பாராலிம்பிக் உயரம் தாண்டுத
வடமாநிலங்களில் கோலோச்சும்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது, தாளமொக்கை ஆத தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந இரு தரப்புக்கும் இடையே நடந்த வன்முறை சம்பவத்தில், இது ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மா மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரி பத கேரள சட்டசபை தேர்தல், ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக நடக்க டி.ஜி.பி.அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக்க
