அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை வரவேற்ப்பதாக கடற்றொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வன்னிபிராந்திய பிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலத்தின் சமுதாய வேலைத்திட்டத்தின் கீழ் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு 15 இலட்சம் ரூபாய் செலவில் வீடு ஒன்று அமைக்கப்பட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக புதியஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டமை நன்மையான விடயமே.
ஆட்சி மாறியுள்ளமையால் நடந்த உண்மைகளை அறிவதற்காக அவ்வாறான குழுக்களை அமைத்து, தகவல்களை பெற்றுக்கொள்வதும் உண்டு. அந்தவகையில் அது வரவேற்ககூடிய விடயமாகும்.
இதேவேளை, இந்தியாவுடனும் நாங்கள் நட்புறவை பேணவேண்டும். அந்தவகையில் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு உத்தேசித்துள்ளமையும் நல்ல விடயமேயாகும். சட்டரீதியான பிரச்சினைகள் இருப்பதால் 51 வீதத்தை இலங்கை அரசும் வேறு முதலீட்டாளர்களிற்கு 49 வீதத்தையும் வழங்கினாலேயே அது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றவகையில் அது செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிக்காகவே அதனை வழங்குவதாக கூறுகின்றமை எதிர்கட்சி அரசியல்வாதிகள் வழமையாக கதைக்கும் விடயமே” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ர
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மேனிக்க
எதிர்காலத்தில் கடுமையான போசாக்கின்மையை தடுக்கும் வக
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர்
தங்கப் பொருட்களைக் கடத்தல் நோக்கத்துடன் வெளிநாடுகளி
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு (Sarat
எமது ஆட்சியாளர்கள் அவ்வப்போது இறைமை, தன்னாதிக்கம்,
இலங்கைக்குள் உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் டொலர்
பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமை
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை,
நுவரெலியா மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கான கொவிட் – 19 த
பதுளை - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிண