வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 18ஆம் திகதி, செட்டிகுளம் நகர்பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர், வீதியை கடக்க முற்பட்டபோது, மதவாச்சியில் இருந்து மன்னார் பகுதி நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில், செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் செல்லப்பன் ராச்குமார் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விபத்து தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (மார்ச் 04) மதியம் 02:00 மணி
கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட
2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் யார் ஜனாதிபதியாக இரு
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை
இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க ட
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன
தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்
வவுனியா சுற்றுலாமைய விடயத்தில் நகரசபையின் குத்தகை ஒப
இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்
இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவி
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தொடர்ந்து
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு ப