நாட்டில் நேற்றைய தினம் மேலும் 15 ஆயிரத்து 583 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சின் தொற்று விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 3 இலட்சத்து 54 ஆயிரத்து 352 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து மேலும் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
இந்தியாவிடம் மேலதிகமாக தடுப்பூசிகளை வழங்குமாறு கடந்த வியாழக்கிழமை, இலங்கை கோரியிருந்தது.
இவ்வாறு தடுப்பூசிகளை வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்த 500,000 ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை இலங்கை நன்கொடையாகப் பெற்ற பின்னர், ஜனவரி 29ஆம் திகதி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பமானது.
முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் முப்படையினர் பொலிஸார் என முன்கள ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட நிலையில் கடந்த வாரம், பொது மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.
சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் த
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை,
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதி
நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விரைவில் நம்பிக்
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதி மற்றும் அதன் சுற்று வட்
இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள
மஹாபொல உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக
யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழி
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத
ஆசிரியர் சேவைக்கு 22 ஆயிரம் பட்
நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தி
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்க் கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்
களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை