ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இதுவரை தீர்வு கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்து கொழும்பு பேராயர் இல்லத்தினால் அறிவிக்கப்பட்ட கறுப்பு ஞாயிறு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
கறுப்பு ஞாயிறு குறித்த தெளிவுப்படுத்தல்களை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியிருந்தார்.
இதற்கமைய, இன்றைய தினம் கத்தோலிக்க மக்கள் கறுப்பு ஆடை அணிந்து ஞாயிறு ஆராதனைகளில் கலந்துக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கறுப்பு ஞாயிறானது ஒரு நாள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு எதிராக தண்டனைகள் வழங்கப்படும் என இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருந்த போதிலும் அது இதுவரை நிகழவில்லை.
எனவே அமைதியான முறையில் அதற்கான எதிர்ப்பினை வெளிப்படுத்தவுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால
இலங்கை அரசாங்கம், பாகிஸ்தானுடன் மேலும் சில புரிந்த
கொழும்பு, பம்பலப்பிட்டி- கிரிஸ்டல் வீதியின் வீட்டு மா
ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்த
நேற்று (01) இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்
நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் ரூபாய்க்கு மே
சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும்
இலங்கை அண்மைக்காலமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்கு
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்ப
புத்தளம் - கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பகுதியில
இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவ
களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை
இந்திய விசாவை பெருந்தொகையான பணத்திற்கு வழங்கிய குற்ற
கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்த
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத