ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து வெளியேறும் தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னமும் எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசு பல கட்சிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. அதில் எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதான பங்காளிக் கட்சியாக இருக்கின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைய எமது கட்சி முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்தது. அதேபோல், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியடையவும் எமது கட்சியே பிரதான காரணம்.
ஆனால், அரசுக்குள் இருக்கும் சிலர் இதை மறந்து செயற்படுகின்றனர். அவர்கள் எங்களை வேண்டுமென்றே தூற்றுகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கடந்த காலங்களில் எத்தனையோ சவால்களைக் கடந்து வந்தது. எனவே, தற்போதைய விமர்சனங்களைக் கண்டு எமது கட்சி பலம் இழக்காது.
அரசிலிருந்து வெளியேறும் தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னமும் எடுக்கவில்லை. அரசுடன் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றோம். ஆனால், அரசுக்குள் இருக்கும் சில விஷக்கிருமிகள் அப்புறப்படுத்த வேண்டும் என்பது எமது பணிவான கோரிக்கை என தெரிவித்துளள்ளார்.
ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல
புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினால
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இ
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளி
மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த
இலங்கை மத்திய வங்கி கடந்த திங்கட்கிழமை 26 பில்லியன் ரூப
காற்றை விதைப்பவர்கள் தவிர்க்க முடியாமல் சூறாவளியை அற
டீசல் தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை (6) முதல்
கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக
இன்று நாட்டில் ஆயிரக்கணக்காண கொலைகள் அல்லது துப்பாக்
உடப்பு - கட்டகடுவ பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி ஒன்றரை
உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்து வரும் சுதேச மற்றும்
இலங்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின்
பேலியகொட மீன் சந்தை இன்று முதல் மொத்த விற்பனைக்காக தி