இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் சுபாங் என்ற இடத்தில் ஒரு இஸ்லாமிய பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், டாசிக்மலாயா மாவட்டத்தில் உள்ள புனித தலத்துக்கு நேற்று முன்தினம் சென்று விட்டு பஸ்சில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
இரவு நேரத்தில் பஸ், சுமேதாங் மாவட்டத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி 20 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விட்டது. பஸ்சில் இருந்தவர்கள் அலறினர். உடனடியாக மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது.
இந்த கோர விபத்தில் 27 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 39 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பலியானவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்துக்கு காரணம் பஸ்சில் ‘பிரேக்’ செயல்படாதது தான் என விபத்தில் படுகாயங்களுடன் உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர். இந்தோனேசியாவில் சாலைகள் மோசமாக இருப்பதால் விபத்துக்கள் நடப்பது சாதாரணமான ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ம் ஆண்டு அங்கு ஒரு பஸ் 80 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் 4 நகரங
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் பதுங்கியிருக்கும் பயங்கரவ
138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்று
உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி எண்ணெய் கிடங்க
சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத
நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தா
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க
அன்சோரேஜ்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அன்கரேஜ
இந்த உள்ளாடையை ஒருநாள், இரண்டு நாள் அல்ல100 நாட்கள் வரைக
தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர்
உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு
கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்க
