கோவையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடி காட்டி, போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் கைதுசெய்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்லை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று பாஜக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி, கோவை மாவட்ட விமான நிலையம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் தாராபுரம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை பீளமேடு பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அந்த அமைப்பின் தலைவர் கோவை கு.ராமகிருஷ்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பிரதமருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, அவர்கள் அவினாசி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை அடுத்து, போராட்டக்காரர்களை கைதுசெய்த போலீசார், அவர்களை வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் பீளமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொய் வழக்கு தொடர்வதில் நாட்டம் செலுத்தி வரும்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (வயது 80), வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பியை,அண்ணன் சரமாரியா முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்க ஆலங்குடி அருகே சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உ பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி சென்னை வர மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற அசாம் மாநிலத்தில் வரும் 27-ந் டெல்லியில் உள்ள சந்தைகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்க கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டு தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 2 மண்டலங்களாக பிரிக் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் உயர்மட்டக் கூட்டத்தி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மா
