நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையில் இது தெரியவந்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆய்வுகூடத்தில் ஆயிரத்து 3 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 129 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் பாரதிபுரம் என்ற பகுதியில் 88 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த தொற்றாளர்களில் 20 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
மேலும் கடந்த 14 நாட்களில் யாழ்ப்பாணம் மாநகர கடைத்தொகுதிகளைச் சேர்ந்த 87 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் மற்றும் பிரதமர் தலைமையிலா
யாழ்ப்பாணம்- மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டை கொ
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர
புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் ப
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே
அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதர
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்க
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்க
எனது பிள்ளை மிக சிரமம் எடுத்து படித்தும், அதன் பெறுபேற
ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆ
இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்
சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சே
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற