இலங்கைக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்லர் பாணியிலான ஆட்சியல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அத்துடன் மக்களை வாழ வைக்கும் ஆட்சியே தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எதேச்சதிகாரத்துக்கு விரைவில் முடிவு கட்டுவோம் எனவும் அவர் உறுதிப்படக் கூறினார்.
செல்லக்கதிர்காமம் – கரவிலே பிரதேசத்தில் 350 குடும்பங்களுக்கு அரிசியை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் உலகத்துக்குப் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர்.
நண்பர்களே எமக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்லர் ஆட்சியல்ல. எமது நாட்டுக்குத் தேவை கொலை கலாசாரம் அல்ல.
நாம் தற்போது செய்ய வேண்டியது கொலைகளை அல்ல. மக்களை வாழ வைக்க வேண்டியதையே நாம் செய்ய வேண்டும்” – என்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேவையேற்படின் ஹிட்லராகவும் மாறுவார் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்குப் பதிலளிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்பட
கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புக
நாட்டில் இன்று(27) மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம ச
இலங்கை மத்திய வங்கி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை
.கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்ச
நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு
கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்
அடுத்த வருடம் பெப்ரவரிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட
இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடும
இலங்கையில் நேற்றைய தினம் 20 மாவட்டத்தில் கொ ரோனா தொற்றா
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்
மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களி
மன்னார் க