வடக்கு மாகாணத்தில் புதிதாக 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதாவது யாழ்ப்பாணத்தில் 13 பேருக்கும் மன்னாரில் இருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யதப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “நேற்று (திங்கட்கிழமை), யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 249 பேரின் மாதிரிகள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
குறித்த பரிசோதனை முடிவுகளிலேயே 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருவருக்கும் தெல்லிப்பழை வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளி இருவருக்கும் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில், சிகிச்சை பெற்ற மூவருக்கும் சாவகச்சேரி வைத்தியசாலையில் நால்வருக்கும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை மன்னார் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு
ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்
சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் கீழ் சிறைக்கைதிகளின்
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப் பட்ட 1,
உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் அகழ்வாராய்ச்சி
கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்து
முல்லைத்தீவில் மாணவர் ஒருவர் காணாமல்போட்யுள்ள நிலைய
யாழ்.பல்கலைக் கழகப்பணியாளர்களிடையே புரிந்துணர்வையும
கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்று மாதக் குழந்தை உட்பட 13 ப
சீனாவின் நல்ல திட்டங்களை ஏற்றுக்கொண்டும் கெட்டவற்றை&n
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்து தூதுவர் மை
தரம் 11 வகுப்புகள் மட்டுமே முதலில் இடம்பெறும்
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்