பயண தடைக்கு பின்னர் இந்தியாவில் தவித்த ஆஸ்திரேலியர்களை சுமந்து கொண்டு முதல் விமானம் ஆஸ்திரேலியா போய்ச்சேர்ந்தது.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை காட்டுத்தீயாய்ப்பரவத் தொடங்கியபோது ஆஸ்திரேலியா அதிரடியாக பயண தடை விதித்தது.
இதன்படி ஆஸ்திரேலியர்கள், இந்தியாவில் இருந்து தடையை மீறி நாடு திரும்பினால் 5 ஆண்டு வரை சிறையும், 66 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் வரையில் அபராதம் (சுமார் ரூ.37 லட்சம்) விதிக்கப்படும் எனவும் எச்சரித்தது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த பயண தடை நன்றாக வேலை செய்ததாக ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரீசன் தெரிவித்தார்.
இந்த தடை உத்தரவு முடிவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியர்களை சொந்த நாட்டில் கொண்டு போய்ச்சேர்ப்பதற்கான முதல் விமானம் தயாரானது.
இதில் 150 பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 பேர் மட்டுமே பயணித்தனர்.
எஞ்சியவர்களில் பெரும்பாலோர் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதால் பயணிக்க முடியாமல் போய்விட்டது என இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ பேரல் தெரிவித்தார்.
இந்த விமானம் நேற்று ஆஸ்திரேலியாவின் டார்வின் போய் தரை இறங்கியது.
இந்த விமானம் ஆஸ்திரேலியர்களை ஏற்றிச்செல்ல டெல்லி வந்தபோது, ஆஸ்திரேலியாவில் இருந்து 1,056 வென்டிலேட்டர்கள், 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ கருவிகளை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூன
ரஷ்யாவின் திட்டமிட்ட வெற்றி தின கொண்டாட்டங்களில் த
உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி மாகாணங்களில் தங்கியு
கடந்த ஏழு தசாப்தங்களாக தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அ
இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி பயன்படுத்த
சில நாட்களுக்கு முன்பு ரஷ்யப் படைகளிடமிருந்து மீட்கப
ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்தியுள்ள
பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியை காண சென்ற இளம்பெண எதிர்வரும் 5 வருடங்களில் புவியின் வெப்பநிலை 1.5 பாகை செல தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் கி கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டில் பரவுவதை கட்டு மேற்கு உக்ரைன் நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12 ஆவது நாளாக நீடிக்க ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போர
