நாகையில், திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி மாவட்ட கலெக்டரை சந்தித்து முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினர்.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் அரசு சந்தித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள், வாய்ப்புள்ளவர்கள் தாமாக முன்வந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதியளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதை தொடர்ந்து தொழில் அதிபர்கள், நடிகர்கள், அரசியல் கட்சியினர் உள்பட பலர் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை புத்தூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகன் ஷெரின் ராஜூக்கும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த விக்டர் ராஜ் என்பவரது மகள் சூர்யாவுக்கும் நாகையில் நேற்று திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி தங்களது பெற்றோருடன் நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரத்தை வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், புதுமண தம்பதியை பாராட்டி திருமண வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர். நிதி
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தா
இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர்
தமிழகத்தில்
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் கிராமப்புற க தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட காஞ்சிபுரம மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 201 பேருக்கு இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா த எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் ப கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக் நாட்டின் பிற பகுதிகளை போலவே டெல்லியிலும் கொரோனா தொற்ற
