ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் டாஷ்தே இ பார்ச்சி நகரில் மகளிர் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இரு தினங்களுக்கு முன் மாலை வகுப்புகள் முடிந்து மாணவிகள் பள்ளியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.
அப்போது பள்ளிக்கூடத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. குண்டு வெடிப்பில் சிக்கி மாணவிகள் மரண ஓலம் விட்டனர். என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து மேலும் 2 குண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த தொடர் குண்டுவெடிப்பு ஒட்டுமொத்த நகரையும் அதிர வைத்தது. முதல் கட்டமாக 25 மாணவிகள் பலியானதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், குண்டு வெடிப்பில் பலியான மாணவிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த காலங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எனவே இந்த கொடூர தாக்குதலையும் அவர்களே நடத்தி இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) கொலை
உக்ரேனியப் பெண்ணின் வீடு ரஷ்ய இராணுவத்தால் தாக்கப்பட
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா நேற்று வெற ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உள்பட பல விஷயங்கள் குறித்து ர மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா, கமலா ஹாரிஸ் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரி உலகளாவிய கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் தொடர்ந்து மந ரஷ்யாவை தொடர்ந்து ஆதரித்தால் சீனா மிகப்பெரிய விளைவுக ஐ.நா.சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் முன்ன அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா த இங்கிலாந்து, இந்தியா இடையேயான பயண கட்டுப்பாட்டு விதிம எகிப்தில் 2000 ஆண்டு பழமையான தங்க நாக்கினைக் கொண
