வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பிலுள்ள தூதுவர்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.
கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது, ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை ஒத்துழைப்பு மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் செயன்முறை உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன என்று வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை உள்ளிட்ட நாடுகள் கொரோனாத் தடுப்பூசிகளை சமமாக அணுகிக்கொள்வதற்கான உலகளாவிய முயற்சிகளை ஆதரிக்கும் கோவெக்ஸ் வசதிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைபி, பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெர்டு, இத்தாலி தூதுவர் ரீட்டா மன்னெல்லா, நெதர்லாந்து தூதுவர் டஞ்சா கொங்கிரிப், ஜேர்மனி தூதுவர் ஹோல்கர் சீபர்ட் மற்றும் ரூமேனியா தூதரகப் பொறுப்பாளர் விக்டர் சியுஜ்தியா ஆகியோர் பங்கேற்றனர்.
அத்துடன் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
இலங்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின்
கிளிநொச்சி மாவட்டத்தின் 7ஆவது பொலிஸ் நிலையம் இன்று உத
கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் த
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் பகுதிகள் உடன் அ
நாட்டின் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்வத
ஒக்டோபர் மாத முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகளின் வருக
திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்
முட்டைக்கான தற்போதைய அதிகபட்ச சில்லறை விலையில் திருத
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வ
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை வ
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
இலங்கை அரசினால் தேசிய நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ள கல உலகின் தலைசிறந்த கோடிஸ்வரர்கள் இலங்கைக்கு சுற்றுலா ப